அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்த டிஜிட் ஆல் அமைப்பு (18.07.2015)
July 18, 2015
டிஜிட்டல் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு (10.10.2015)
October 10, 2015

அனைவருக்கும் டிஜிட்டல் பயிற்சி (30.08.2015)

11988276_769010823228779_2641355250972554422_nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் 18.07.2015 அன்று முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட Digit All அமைப்பின் அறிமுகக்கூட்டம் ஆகஸ்ட் 30, 2015 அன்று தமிழ்நாடு வர்த்தக சங்க பவளவிழா ஹட்சன் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்திய தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தினவேல் தனது உரையில், துவக்க விழா நாளில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடம் தான், உரையாற்றிக் கொண்டிருக்கும்போது இந்த அமைப்பின் நோக்கம் குறித்து மிகவும் பாராட்டி  இதன் மூலம் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் மேன்மை அடைய வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.

தற்போது அனைத்து துறைகளிலும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இவ்வேளையில், பெரிய அளவில் வியாபாரம் செய்யும் வர்த்தகர் பலரும் இந்த Digital knowledge ஐ கற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளார்கள் எனவும் அவர்கள் சில்லரை வர்த்தகத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் E-Commerce துறையின் போட்டியை சமாளித்து தாங்களும் அந்த துறையில் எவ்வாறு ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதற்காகவும், அவர்கள் Online-ல் பல்வேறு Government Return-களை பதிவு செய்ய கற்றுக்கொடுப்பதற்காகவும் துவங்கப்பட்ட அமைப்பே என குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் பல்வேறு சமூக இணையதளங்கள் மற்றும் Digital அறிவை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்பது குறித்தும், பெண்களுக்கு அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய Digital knowledge – ஐ கற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடு துவக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பம்சத்தையும் எடுத்துரைத்தார்.

11137112_769010819895446_4951869030433634141_nTamilnadu Chamber Foundation-ன் Managing Trustee திரு.V.நீதிமோகன் தன்னுடைய வாழ்த்துரையில், வணிக பெருமக்களுக்கு தேவைப்படும் பல்வேறு அறிவாற்றலை கற்பிக்கும் வண்ணம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் மூலம் தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு அமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்புக்களின் நடவடிக்கைகள் மூலம் பல்வேறு மக்களும் பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அன்றாட வாழ்வில்  INTERNET, SMART PHONE, APPLICATIONS, பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாம் வேறு நாடுகளில் இருந்தாலும் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி நம் நாட்டில் இருப்பது போல நம்முடைய செயல்களை முடித்துக் கொள்ளமுடியும். மேலும் நாம் அன்றாட வேலைகளை மிகவும் சிறப்பாக செய்துமுடிக்க முடியும். தொழில் வணிக பெருமக்கள் தங்களுடைய வியாபாரத்தில் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் அறிந்து வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து தங்களுடைய வணிகத்தை சிறப்பாக நடத்த டிஜிட்டல் அறிவு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களின் மனோபாவத்தை அறிந்து அதற்கேற்றார்போல் தங்களுடைய சந்தைப்படுத்தும் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதற்காக DATA SCIENCE என்ற ஒரு துறையே தற்போது பிரபலமடைந்து வருகிறது. எனவே தொழில் மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு பயன்பாட்டை அளிக்கக் கூடிய இந்த டிஜிட்டல் அறிவை கற்றுக்கொள்ளாவிட்டால் நாம் பல நல்ல பயன்பாடுகளை இழக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

11947587_769010816562113_1673432269805048872_nDigit All  அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் தனது உரையில் தற்போது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் நாம் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தந்தி, தபால் மற்றும் பிற தகவல் சாதனங்கள் இல்லாமல் போய்விட்டன. வேறு ஊரில் இருப்பவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் அவசியமின்றி தகவல் தொழில்நுட்பம் மூலமாகவே நேரடியாக பார்த்து பேசிக்கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மேலும் பல ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசும் தொழில்நுட்பத்தை அனைத்து கிராமங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அனைவரும் டிஜிட்டல் அறிவை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வியாபாரிகள் தங்களுடைய தொழிலை தொடர்ந்து செய்ய, வளர்க்க, கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த அமைப்பு துவக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த அமைப்பின் மூலம் சிறு வியாபாரிகள், மூத்த குடிமகன்கள், கிராம மக்கள், மாணவர்கள் ஆகிய 5 பிரிவினர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடபட்டுள்ளது என்றும் இந்த பயிற்சி Basic Cource, Business Cource என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவரவர் தேவைக்கேற்றாற்போல சேர்ந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் செயல்முறையோடு கற்றுக்கொள்ள செய்முறை பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த துறையில் அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள், மாணவர்கள், ஏற்கனவே வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தபட இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

11219725_769010896562105_2722364252632573813_nஅடுத்ததாக பேசிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள், ஒருவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அந்த துறையில் ஞானம் பெற்றுவிடலாம். அப்படித்தான் நாங்கள் ஏற்றுமதியாளர்களை உருவாக்குகிறோம்.

வர்த்தக சங்கத்தில் செயல்படும் அமைப்புகள் அனைத்தும் லாப-நோக்கமற்றவை. இருப்பினும் இங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பயிற்றுவிக்கப்படும் பயிற்சியின் மதிப்பை உணர்த்தவே என்றார். இறுதியாக டிஜிட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.மதன் அவர்கள்  நன்றியுரை கூறினார்.