டிஜிட்டல் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு (10.10.2015)
October 10, 2015
வர்த்தகத்தை பன்மடங்கு பெருக்க உதவும் இணையதள பயன்பாடு (25.11.2015)
November 25, 2015

பேஸ்புக் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு (14.11.2015)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் BASIC COURSE- ன் இரண்டாம் வகுப்பு நவம்பர் 14, 2015 அன்று ஹட்சன் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் இணைய தளத்தில் BUS TICKET BOOKING, TRAIN TICKET BOOKING, FLIGHT TICKET BOOKING, THEATRE TICKET BOOKING மற்றும் FACE BOOK பயன்பாடுகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டதுடன் சிறப்பு வகுப்பாக IOT (INTERNET OF THING) குறித்தும் விளக்கப்பட்டது.
முன்னதாக தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் பேசும் போது, IOT (INTERNET OF THING) என்பது (MACHINE TO MACHINE COMMUNICATION) இரண்டு இயந்திரங்கள் தங்களுக்குள் தகவல் தொடர்பை பரிமாறி பணியை மேற்கொள்வது ஆகும். MOBILE, SMART WATCHES, CCTV, LED TV & ANY SMART DEVICES – போன்ற பொருட்கள் IOTக்கு சிறந்த உதாரணங்கள் என்றார்.

மேலும் தற்போதுள்ள காலத்தில் ICT (INTERNET COMMUNICATION TECHNOLOGY ) ஐ விட IOT (INTERNET OF THING) 10 சதவீதம் வளரப் போகிறது என்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் குறித்தும் மக்களுக்கு அதன் மேலுள்ள தேவையற்ற பயம் குறித்தும் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

இந்த பயிற்சி அரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் திரு.செந்தில் குமரன் அவர்கள் பேசும் போது, 2016 முதல் இனிவரும் காலங்களில் IOT தான் உலகில் பெரும்பகுதி வேலையை செய்யப்போகிறது.

அதாவது, நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் இணைய உயிர்கொடுத்து அதன் மூலம் இயந்திரங்கள் தங்களுடைய பணியை செய்யப்போகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை கொரிய தொழில்நுட்பத்தை முன்னுதாரணமாக கூறினார்.

தொழில்நுட்ப விஷயங்களில் தென் கொரியா, அமெரிக்காவை விட பலமிக்கது. ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் MEMORY தொழில்நுட்பத்தை கொரியர்களே கண்டுபிடித்தார்கள். எந்த ஒரு ஸ்மார்ட் போனுக்கும் அவர்களே MEMORY தொழில்நுட்பத்தை புகுத்துகிறார்கள். மேலும் அதை தங்களது தாய் மொழியில் வைத்திருப்பதன் மூலம் யாரும் திருட முடியாதபடி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

  1. கொரியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நம்புகிறார்கள்.
  2. தாய்மொழியை நேசித்து அதை மறக்காமல் தங்கள்
    பணிகளில் பயன்படுத்துகிறார்கள்.
  3. தொழிலாளர்களை ஊக்குவிக்கிறார்கள்.

இந்த மூன்றுதான் கொரியர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்பதுடன் இதேவேளையில் இந்தியர்களாகிய நாம், பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொண்டு அதிலேயே பயணிக்கிறோம் என்றார்.

இதற்கு அடுத்தபடியாக FACEBOOK பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பை தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கினார்.

பேஸ்புக் கணக்கை துவங்குவது, கருத்துக்களை பதிவு செய்வது, புகைப்படங்களை அப்டேட் செய்வது, குரூப் துவங்குவது என அதன் தொழில்நுட்ப விஷயங்களை பற்றி எடுத்துரைத்தார்.
சமீபத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் பேஸ்புக் அலுவலகம் சென்றபோது, பேஸ்புக் ஒரு நாடாக இருந்தால் மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத்த நாடாக உருவாகியிருக்கும். ஏனெனில் அவ்வளவு பயனர்கள் பேஸ்புக் கணக்கை பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னதாக டிஜிட் ஆல் தலைவர் குறிப்பிட்டார்.

உலகில் 7-ல் ஒரு நபர், குறிப்பாக பேஸ்புக்கை 155 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும் இதில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளதாக கூறினார்.

இந்த பயிற்சி அரங்கிற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தினவேல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.