அனைவருக்கும் டிஜிட்டல் பயிற்சி (30.08.2015)
August 30, 2015

அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்த டிஜிட் ஆல் அமைப்பு (18.07.2015)

digitallதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90வது ஆண்டு நிறைவு விழாவுடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘டிஜிட் ஆல்’ அமைப்பின் தொடக்க விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஜுலை 18, 2015 அன்று நமது வர்த்தக சங்கத்திற்கு வருகை தந்து சிறப்பித்தார்.

இவ்விழாவிற்கு வர்த்தக சங்க தலைவர் திரு.N.ஜெகதீசன் தலைமை தாங்க, முதுநிலை தலைவர் திரு.S. ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.

டிஜிட் ஆல் அமைப்பை தொடங்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது, ‘டிஜிட் ஆல்’ தொழில்நுட்பம் மூலம் தொழில்முனைவோருக்கு கணினி, சமூக வலைத்தள அறிவை கற்பிக்க வேண்டும். தற்போது ‘பிக்டேட்டா’ முறை வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்றார்.

மதுரை மல்லிகைக்கு உலகளவில் ‘பிராண்ட்’ செய்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா 20க்கு 20 திட்டத்தின் மூலம் கிராமங்களை ஒருங்கிணைந்த பன்முக பொருளாதார வளர்ச்சி பெற்றதாக மாற்ற முடியும் எனவும் கலாம் தெரிவித்தார்.

இவ்விழா அரங்கில் செயலாளர் ராஜமோகன், பொருளாதாரர் ஜீயர்பாபு, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நீதிமோகன் நன்றியுரை கூறினார்.