கலாமின் டிஜிட் ஆல் வில்லேஜ் துவக்க விழா !
September 22, 2017
24/7 ஆன்லைன் விற்பனை!
September 29, 2018

டிஜிட்ஆல் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கார்டு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட்ஆல் அமைப்பின் ஸ்மார்ட் கார்டை, இயக்குனர் சேரன், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் அறிமுகப்படுத்தினர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்ஆல் அமைப்பை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்.

இவ்வமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குனர் சேரன் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார்.

இயக்குனர் சேரன் பேசும் போது :- இந்த டிஜிட் ஆல் ஸ்மார்ட் கார்டை, பொதுமக்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள் என அனைவரும் வாங்கி, பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் கிராம மக்களின் டிஜிட்டல் அறிவை வளர்க்க பயன்படும். மேலும் தற்போதுள்ள மருத்துவமுறைகளை நமது சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிக்கொடுத்துவிட்டனர். அந்த மருத்துவ குறிப்புகள், இணையதளங்களில் பரந்துகிடக்கின்றன. அதை தேடிக்கண்டுபிடித்து பயன்பெற டிஜிட்டல் அறிவு அவசியம் என கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்த்தின் முதுநிலைத்தலைவர் எஸ்.இரத்தினவேல், சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன், டிஜிட் ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.