செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 22.07.2017
July 31, 2017
டிஜிட்ஆல் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கார்டு
September 30, 2017

கலாமின் டிஜிட் ஆல் வில்லேஜ் துவக்க விழா !

dsc_4877தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட்ஆல் அமைப்பின் கலாமின் “டிஜிட்ஆல் வில்லேஜ்” துவக்க விழா மதுரை அருகே கோட்ட நத்தம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபேற்றது.

இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.K.வீரராகவ ராவ் IAS, அவர்கள் வாழ்த்துரை வழங்க தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் திரு.S. இரத்தினவேல், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர்   திரு.N.ஜெகதீசன் மற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனின் மேனேஜிங் டிரஸ்டி திரு.V.நீதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் திரு.JK.முத்து அவர்கள், கலாமின் டிஜிட்ஆல் வில்லேஜ் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

dsc_4880இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தினவேல் பேசும் போது:-  டிஜிட்ஆல் அமைப்பானது நகர்புறத்திலே, முதியோர்,  குடும்பப் பெண்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோருக்கு சிறப்பான முறையில் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்தியது. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த அமைப்பை இதோடு விட்டு விடாமல் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் அறிவாற்றலை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதிலே உதிக்க, அதை நான் திரு.JK.முத்து அவர்களிடம் கூறினேன். அவரும் அயராது உழைத்து இரண்டே மாதங்களில் இந்த கிராமத்தை தேர்வு செய்து, “கலாமின் டிஜிட்ஆல் வில்லேஜ்” உதயமாகியிருக்கிறது. இதே போல பல கிராமங்களை இந்த அமைப்பு “கலாமின் டிஜிட்ஆல்” வில்லேஜாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று பேசினார்.

dsc_4881தமிழ்நாடு தொழில் வர்த்தக் சங்கத்தின் தலைவர் திரு.N.ஜெகதீசன் பேசும் போது :-  டிஜிட்ஆல் அமைப்பின் மூலம் எங்கள் தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்திற்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது. இவ்வமைப்பு கோட்டநத்தம் கிராமத்தை தேர்வு செய்தது போல் மேலும் பல கிராமங்களுக்கு டிஜிட்டல் சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்று பேசினார்.

தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் மேனேஜிங் டிரஸ்டி திரு.V.நிதிமோகன் பேசும் போது:- டிஜிட்ஆல்  அமைப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிறது. கடந்த 2 வருடங்களில் இந்த அமைப்பு நகர்புறத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு மட்டும் நிற்காமல் தனது டிஜிட்டல் சேவையை கிராம மக்களும் பெற்று அவர்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று திரு.J.K. முத்து அவர்களும் அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர்களும் அயராது உழைத்திருக்கின்றனர் ; அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
என்று பேசினார்.

dsc_4945சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆட்சியர் திரு.K.வீரராகவ ராவ்  IAS  அவர்கள் பேசும் போது:- டிஜிட்ஆல் அமைப்பு பற்றி நான் கேள்வி பட்டிருக்கிறேன்.  ஆனால் இந்த அளவுக்கு அது திறம்பட செயல்படுகிறது என்பதை இப்போது தான்  உணர்கிறேன். கலாம் அவர்களின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியாவிற்கு உறுதுணையாக இந்த அமைப்பு திகழ்கிறது. இந்த நல்ல நோக்கம் வெற்றியடைந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள 6000 கிராமங்களுக்கு டிஜிட்டல் அறிவு சென்றடைய வேண்டும், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே மதுரை மாவட்டம் “டிஜிட்டல்” மயமாகத் திகழ வேண்டும், ஒவ்வொரு  மக்களும் டிஜிட்டல் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதுள்ள போட்டி சூழலில் டிஜிட்டல் அறிவை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

எனவே இந்த “டிஜிட்ஆல்” அமைப்பை பயன்படுத்தி தங்கள் டிஜிட்டல் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

dsc_4838இதையடுத்து கலாமின் டிஜிட்ஆல் வில்லேஜ் லோகோவை திறந்து வைத்து, முதல் பத்து நபர்களுக்கு விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

துவக்க விழாவின் நிறைவாக டிஜிட்ஆல் அமைப்பின் செயலாளர் திரு.K. சுந்தரேஷ் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி கூறினார்.